கன்னட சினிமாவின் நட்சத்திர நடிகர்களில் ஒருவரான நடிகர் கிச்சா சுதீப் தென்னிந்திய அளவில் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார்.
கிச்சா சுதீப் நடிப்பில் இயக்குனர் அனுப் பண்டாரி எழுதி இயக்கியுள்ள விக்ராந்த் ரோணா திரைப்படம் 3டியில் வெளியாகவுள்ளது. கிச்சா கிரியேஷன்ஸ், ஷாலினி ஆர்ட்ஸ் மற்றும் இன்வெனியோ பிலிம்ஸ் இந்தியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து இத்திரைப்படத்தை தயாரித்துள்ளன.
இத்திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு வில்லியம் டேவிட் ஒளிப்பதிவு செய்துள்ளார் அஜநீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் கிச்சா சுதீப்பின் பிறந்த நாளான இன்று இப்படத்தின் முன்னோட்டமாக புதிய ப்ரோமோ வீடியோ வெளியானது.