டிகர் விக்ரம் நடிக்கும் படம் கோப்ரா. இப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்குகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கி றார். இதில் கதாநாயகியாக ஸ்ரீநிதி செட்டி நடிக்கிறார். இவர் கே.ஜி.எப் சேப்டர் ஒன் படத்தில் நடித்தவர்.

கடந்த இரண்டு மாதத்துக்கு முன் கோப்ரா படத்தில் விக்ரம் ஏற்கும் 8 வித வித்தியாசமான தோற்றங்களின் படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் பாடல் சிங்கிள் வரும் 29ம் தேதி, ’தும்பி துள்ளல்’ பாடல் அன்றைய தினம் மாலை 5 மணிக்கு வெளியாகிறது.
இதுபற்றி ரஹ்மான் கூறும்போது.’தும்பி துள்ளல் கோப்ரா முதல் சிங்கிள் பாடல் காதலின் கொண்டாட்டம். 29ம் தேதி 5 மணிக்கு எதிர்பார்த்து காத்திருங்கள்’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

[youtube-feed feed=1]