![]()
ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் புஷ்கர் – காயத்ரி இயக்கிய விக்ரம் வேதா தமிழ்நாட்டில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதனை இந்தியில் ரீமேக் செய்ய புஷ்கர் – காயத்ரி முடிவு செய்தனர். 2017-ம் ஆண்டு ஜூலை 21-ம் தேதி வெளியான இந்தப் படத்தின் அனைத்து ரீமேக் உரிமைகளும் தயாரிப்பாளர் சஷிகாந்திடம்தான் உள்ளன. இந்தியில் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, ரீமேக் தயாரிக்கும் பணிகளையும் மேற்கொண்டார். புஷ்கர் – காயத்ரி இருவருமே இயக்க ஒப்பந்தமானார்கள்.
மாதவன் கதாபாத்திரத்தில் சைஃப் அலி கான், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹ்ரித்திக் ரோஷன் இருவரும் நடிக்கவுள்ளனர். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கி, செப்டம்பர் 30, 2022-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]