பெங்களூரு

நிலவில் தென் துருவப்பகுதியில் பிளாஸ்மா இருப்பதை விக்ரம் கண்டுபிடித்துள்ளது.

இந்தியாவில் இருந்து நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டு உள்ள சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் பிரிந்து சென்றது. லேண்டரில் இருந்து வெளியேறிய பிரக்யான் ரோவர் நிலவைத் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது..

நிலவில் சந்திரயான் 3 விண்கலத்தின் ரோவர் பாதுகாப்பாக உலா வரும் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. ரோவரை, விக்ரம் லேண்டர் குழந்தையைப் போல் கண்காணித்து வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் பிளாஸ்மா இருப்பதைக் கண்டறிந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும் பிளாஸ்மா சூழலை முதன் முதலில் அளவீடு லேண்டர் செய்துள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.