கான்பூர்
ரோடோமாக் பேனா நிறுவன அதிபர் மொத்தம் ரூ.3695 கோடி கடனை 7 வங்கிகளில் வாங்கி திருப்பி செலுத்தவில்லை என சிபிஐ அறிவித்துள்ளது.
ரோடோமாக் பேனா நிறுவன அதிபர் விக்ரம் கோத்தாரி வங்கிகளில் ரூ.800 கோடி கடன் வாங்கிவிட்டு திருப்பித் தரவில்லை எனவும் அதனால் அவர் தலைமறைவாகி விட்டதாகவும் தகவல் வெளியானது. அதை மறுத்த விக்ரம் கோத்தாரி தாம் இந்தியாவில் இருப்பதாகவும் தாம் கடனை செலுத்தாதவன் என வங்கிகள் அறிவிக்கவில்லை எனவும் தமது நிறுவனம் லாபம் ஈட்டாத நிறுவனம் எனவும் பதில் அளித்தார்.
தற்போது சிபிஐ விக்ரம் கோத்தாரி யின் கடன் விவரங்களுடன் அவர் மீது ஒரு முதல் தகவல் அறிக்கை பதிந்துள்ளது. அதன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் விக்ரம் கோத்தாரி மொத்தம் ரூ. 3695 கோடிக்கு மேல் வங்கிக்கு செலுத்த வேண்டிய பாக்கி தொகை உள்ளதாக தெரிய வந்துள்ளது.
முதல் தகவல் அறிக்கையில் காணப்படும் கடன் தொகை வங்கி வாரியாக பின் வருமாறு:
பேங்க் ஆஃப் இந்தியா – 754.77 கோடி
பேங்க் ஆஃப் பரோடா – 456.63 கோடி
இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கி – 771.07 கோடி
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா – 458.95 கோடி
அலகாபாத் வங்கி – 330.68 கோடி
பேங்க் ஆஃப் மஹாராஷ்டிரா – 49.82 கோடி
ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் – 97.47 கோடி
இவ்வாறு முதல் தகவல் ஆறிக்கையில் கூறப்பட்டுள்ளது.