மும்பை
இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் டபுள்யூபிஓ ஆசியா பசிஃபிக், மற்றும் ஓரியண்டல் ஆகிய இரு போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இந்தியாவின் குத்துச்சண்டை வீரரான விஜேந்தர் சிங் நேற்று நடந்த சிங் டபுள்யூபிஓ ஆசியா பசிஃபிக் குத்துச்சண்டை போட்டியில் சீனாவின் குத்துச்சண்டை வீரரான சுல்பிகரை தோற்கடித்து பட்டத்தை வென்றார். இது இவருக்கு ஒன்பதாவது தொடர் வெற்றியாகும். சீன வீரர் சுல்பிகார் தான் கலந்துக் கொண்ட 8 போட்டிகளில் 7 போட்டிகளை வென்றவர். சுல்பிகருக்கு வயது 24 என்பதும் விஜேந்தரின் வயது 32 என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுல்பிகர் கடந்த ஆண்டு ஜூலையில் நடந்த ஓரியண்டல் போட்டியில் தான்சானியாவை சேர்ந்த தாமஸ் என்னும் வீரரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றவர். இந்திய வீரர் விஜேந்தர் தற்போது சுல்பிகரை வெற்றி கொண்டதன் மூலம் ஓரியண்டல் சாம்பியன் பட்டமும் விஜேந்தர் சிங்குக்கு கிடைத்துள்ளது
இது உலக அளவில் மாபெரும் சாதனையாக புகழப்படுகிறது