
மலையாளத்தில் மார்க்கோனி மத்தாய் படத்தில் அறிமுகமான விஜய் சேதுபதி, அடுத்து 19 (1)(a) என்ற படத்தில் நடித்துள்ளார். இந்து இயக்கிய இந்த படத்தில் தமிழகத்தைச் சேர்ந்த, ஆனால், கேரளாவில் வசிக்கும் எழுத்தாளர் வேடம் விஜய் சேதுபதிக்கு.
அவரே தமிழ் கலந்த மலையாளத்தில் சொந்த குரலில் பேசியுள்ளார். நித்யா மேனன், இந்திரஜித் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படம் முடிவடைந்திருக்கும் நிலையில், ஓடிடியில் வெளியிட முயற்சிகள் நடக்கின்றன. கொரோனா அலை எப்போது தணியும், எப்போது திரையரங்குகள் திறக்கும் என்பது தெரியாத நிலையில் இந்த முடிவை தயாரிப்பு தரப்பு எடுத்திருக்கிறது.
Patrikai.com official YouTube Channel