இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் மாமனிதன் . தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் சீனு ராமசாமி இணையும் படம் இது.
முதல் முறையாக ஆட்டோ ஓட்டுநராக நடித்துள்ளார் விஜய் சேதுபதி. குரு சோமசுந்தரம், பேபி மானஸ்வி, அனிகா ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளார்கள்.
இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காய்த்ரி நடித்துள்ளார். இந்த படத்திற்கு முதன் முதலாக இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர்.
யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து 2 ஆண்டுகள் ஆகியும் சில பிரச்சினைகள் காரணமாக படம் ரிலீசாகாமல் உள்ளது. இந்நிலையில், இப்படம் குறித்த புதிய அப்டேட்டை யுவன் சங்கர் ராஜா வெளியிட்டுள்ளார்.
இப்படத்தின் ஏ ராசா என்னும் இரண்டாவது பாடலை (மே 28) நாளை வெளியிட இருப்பதாக இசையமைப்பாளர் அறிவித்திருக்கிறார்.