மாஸ்டர் படத்தில் நடிப்பதற்காக விஜய், விஜய் சேதுபதி, அனிருத், லோகேஷ் கனகராஜ் ஆகியோர் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படம் உலகம் முழுவதும் ரூபாய் 300 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
திரைப்படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ பிரபல தனியார் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் மாஸ்டர் படம் வெளியீட்டில் இருந்த சிக்கல்கள், படத்தின் மொத்த வசூல், விஜய்யின் சம்பளம் ஆகியவை குறித்து அவர் பேசியுள்ளார்.
விஜய்யின் சம்பளம் குறித்து பேசும் போது, படம் ரிலீசாக தாமதமாகும் பொழுது அதை குறைத்துக் கொள்ள சொன்னீர்களா என்று கேட்டபொழுது, நாம் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு விலை வைத்திருக்கிறோம். வெள்ளி, தங்கம், வைரம் என ஒவ்வொன்றுக்கும் அதன் மதிப்பிற்கேற்ப விலை மாறுபடும். அதுபோலவே விஜய் அவர்களின் உழைப்புக்கு நாம் தரும் மரியாதை அவரது சம்பளம். அதை அவரை குறைத்துக் கொள்ளுமாறு நான் வற்புறுத்தவில்லை. அவர் 2 ஆண்டுகளாக இல்லை, கடந்த 1992ஆம் ஆண்டு முதல் இன்று வரை ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்திருக்கிறார். அவர் திரைப்படங்கள் நல்லபடியாக வெளியாகி வசூல் சாதனை புரிந்து வருகின்றன. எனவே அவர் கேட்கும் சம்பளத்தை கொடுப்பதுதான் உரிய மரியாதை என்று தெரிவித்துள்ளார்.
விஜய் ரூபாய் 80 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார். விஜய் சேதுபதி ரூபாய் 10 கோடி சம்பளமாக பெற்றுள்ளார். இசையமைப்பாளர் அனிருத் ரூபாய் 3.5 கோடி சம்பளம் பெற்றுள்ளார். அதே போல் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ரூபாய் 2 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார்.