ங்கிலாந்தில் நடைபெற உள்ள தேசிய திரைப்பட அகாடமி விருது வழங்கும் விழாவில் நடிகர் விஜய் நடித்துள்ள மெர்சல் படம் பங்குபெறுகிறது. இதை தேசிய திரைப்பட அகாடமியும் உறுதி செய்துள்ளது.

ஆண்டுதோறும் இங்கிலாந்தில் உன்ன தேவிய திரைப்பட அகாடமி சிறந்த படங்கள் மற்றும் அதில் நடித்திருக்கும் நடிகர் நடிகைகளை தேர்வு செய்து விருது வழங்குவது வழக்கம்.

அதன்படி கடந்த ஆண்டுக்கான சிறந்த வெளிநாட்டு படங்கள் குறித்த  போட்டியில், மத்திய மாநில அரசுகள் குறித்து விமர்சித்த நடிகர் விஜய் நடித்துள்ள மெர்சல் படமும் சிறந்த வெளிநாட்டு படங்களுக்கான பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

இதனை இங்கிலாந்தின் National Film Awards, தன்னுடைய அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

இதன் காரணமாக  ‘மெர்சல்’ படத்துடன் பிரான்ஸ், ரஷ்யா, ஜெர்மனி, ஸ்வீடன், சிலி, தென்னாப்பிரிக்கா, லெபனான போன்ற நாடுகளின் படங்கள் பங்கேற்கின்றன.

இதற்கான ஆன்லைன் வாக்கு பதிவு நேற்று முதல் தொடங்கி வரும் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறுபவர்களின் விவரம்  மார்ச் மாதம் 28-ம் தேதி நடைபெற உள்ள விருது விழாவில் அறிவிக்க உள்ளனர்.

இந்த வாக்குப்பதிவில் அதிக வாக்குகள் பெற்று மெர்சல் படம் தேர்வானால் மட்டுமே விருதுக்கு தேர்வு செய்யப்படும் என கூறப்படுகிறது.

 

[youtube-feed feed=1]