சென்னை: பொங்கலுக்கு வெளியாக உள்ள நடிகர் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ படத்தின் கிளிப்புகள் ஆன்லைனில் கசிந்தன.இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள அவரது ரசிகர்கள், அதை பகிர வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விஜய், விஜய் சேதுபதி, மாலவிகா மோகனன் ஆகியோர் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம், கடந்த 2020 ஆம் ஆண்டில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தொற்றுநோய் காரணமாக, படம் வெளியாவதில் சிக்கல் நீடித்தது. இதையடுத்து, 2021 பொங்கல் அன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, மாஸ்டர் திரைப்படம் நாளை (புதன்கிழமை) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்னதாக, விஜய்யின் மாஸ்டரின் சில கிளிப்புகள் ஆன்லைனில் கசிந்ததாகக் கூறப்படுகிறது. இது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் தயாரிப்பாளர்கள் எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் உட்பட படத்தின் குழுவினர் மாஸ்டர் படத்தில் இந்து கசிந்த எந்தவொரு கிளிப்பையும் பகிரவோ அல்லது அனுப்பவோ கூடாது என்று கேட்டுக்கொண்டனர்.
இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜ் , “அன்பர்களே, மாஸ்டரை உங்களிடம் கொண்டுவருவதற்கு 1.5 ஆண்டுகால போராட்டமாக இருந்தது. எங்களிடம் இருப்பது நீங்கள் அதை திரையரங்குகளில் ரசிப்பீர்கள் என்ற நம்பிக்கை மட்டுமே. திரைப்படத்திலிருந்து கசிந்த கிளிப்களை நீங்கள் கண்டால், தயவுசெய்து அதைப் பகிர வேண்டாம். உங்கள் அனைவருக்கும் நன்றி. அனைவரையும் நேசிக்கிறேன். இன்னும் ஒரு நாள் மற்றும் # மாஸ்டர் உங்களுடையது ”என்று தெரிவித்துள்ளார்.
அதைத்தொடர்ந்து, விஜய்யின் ரசிகர்களும் டிவிட்டர் மற்றும் பிற சமூக ஊடக தளங்களில், மாஸ்டர் படத்தின் கிளிப்ஸை யாரும் பகிர வேண்டாம் என சமுக வலைதளங்களில் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.