
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அதிகாலை அனுமதிக்கப்பட்டார்.
கொரோனா தொற்று கண்டறிவதற்கான பரிசோதனையில், விஜயகாந்துக்குக் கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும் சிடி ஸ்கேன் பரிசோதனையிலும் கோவிட் நிமோனியா அறிகுறிகள் எதுவும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது. ஓரிரு நாட்களில் சிகிச்சை முடிந்து விஜயகாந்த் வீடு திரும்புவார் என தெரிவித்துள்ளனர் .
[youtube-feed feed=1]