சென்னை:
5கோடி ரூபாய் வாங்கிய கடனுக்காக ரூ.100 கோடி மதிப்பிலான தேமுதிக தலைவர் விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் கல்லூரி சொத்து ஏலத்துக்கு வந்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே மாமண்டூர் பகுதியில், ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி உள்ளது. இது விஜயகாந்த்துக்குச் சொந்தமானது. சுமார் 75 அளவிலான நிலத்தில், சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
ஸ்ரீஆண்டாள் அழகர் எஜுகேஷனல் டிரஸ்ட் மூலம் இந்த கல்லூரி மற்றும் கல்லூரிக்கு தேவை யான நிலங்கள் வாங்கப்பட்டுள்ளது. விஜயகாந்த். நடிகராக இருந்தபோதே இந்த கல்லூரியை உருவாக்கினார். ஸ்ரீஆண்டாள் அழகர் எஜுகேஷனல் டிரஸ்ட்டின் உரிமையாளர்களாக விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் உள்ளனர்.

ஒரு காலத்தில் ஓகோவென்று செயல்பட்டு வந்த இந்த கல்லூரியில் கடந்த சில ஆண்டுகளாக மாணவர்கள் சேர்க்கை குறைந்ததை தொடர்ந்து பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தது. இந்த நிலையில், தற்போது வங்கியில் வாங்கிய கடனுக்காக ஏலத்துக்கு போகும் நிலை உருவாகி உள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கல்லூரியின் இடங்களை அடகு வைத்து விஜயகாந்த் ரூ.5 கோடியே 52லட்சத்து, 73ஆயிரத்த 825 ரூபாய் கடனாக வாங்கி உள்ளார்.
இந்த கடன் இதுவரை செலுத்தப்படாத நிலையில், வங்கி விஜயகாந்த்தின் ஆண்டாள் அழகர் கல்லூரி இடத்தை ஏலத்துக்கு விற்க முடிவு செய்து இன்று பத்திரிகையில் விளம்பரம் கொடுத்துள்ளது.
வரும் 26-07-2019 அன்று ஏலம் விடப்படுவதாக வங்கி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
ஏறக்குறைய ரூ.5 கோடி கடனுக்காக சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் ஏலத்துக்கு வந்துள்ளன. இது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
ஏலம் விவரம்:

பல வருடமாக நடந்து வரும் இந்தக் கல்லூரியில், மாணவர்கள் சேர்க்கை குறைந்ததை தொடர்ந்து யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைப்படி பேராசிரியர்களுக்கு ஊதியம் தரப்படுவதி்ல்லை என்று புகார் எழுந்து பிரச்சினையானது.
இதற்கிடையில்,விஜயகாந்த் நோய்வாய்ப்பட்டு படுத்துவிட, கல்லூரியை அவரது மைத்துனர் சுதீஷும், மனைவி பிரேமலதாவும் நடத்தி வந்தனர். ஆனால், அவர்களின் அதிகார தோரணை கல்லூரியிலும் எதிராலித்த நிலையில், பல பிரச்சினைகள் உருவாகின. இதையடுத்து பல பேராசியரிகள் பணியில் இருந்து விலகி சென்ற நிலையில், கல்லூரியின் பெயர் மோசமடைந்து, மாணவர்கள் சேர்க்கையும் வெகுவாக குறைந்தது.
இந்த நிலையில், விஜயகாந்த் குடும்பத்தினர் கல்லுரியில் கவனம் செலுத்தாமல், தீவிர அரசியலில் கவனம் செலுத்த தொடங்கிய நிலையில், தற்போது ஆண்டாள் அழகர் கல்லூரி அமைந்துள்ள சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து விற்பனைக்கு வந்துள்ளது அவலம் நிகழ்ந்துள்ளது.
[youtube-feed feed=1]