சென்னை:
பெண் முதல்வராக இருக்கும் தமிழகத்தில் பெண்களுக்கே பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது  என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
தேமுதிக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. இதில் கலந்து கொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:
“இளம் பெண் சுவாதி கொலை வழக்கில் குற்றவாளியை தமிழக காவல்துறையினர் பிடித்து விட்டதால், முதல்வர் ஜெயலலிதா காவல்துறைக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
download (2)
இதுவரையில் எத்தனையோ கொலை, குற்றசம்பவங்கள் நடந்துள்ளன. இதில், குற்றவாளிகளை யாரையாவது காவல்துறையினர் பிடித்தார்களா? திருச்சியில் ராமஜெயம் கொலை, காவல்துறை அதிகாரி விஷ்ணுபிரியா தற்கொலை சம்பவம்…  இதுபோன்ற வழக்குகள் என்ன ஆனது?
நீதிமன்றம் தலையிட்டதால், தற்போது விஷ்ணுபிரியா வழக்கு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. சுவாதியின் கொலை வழக்கிலும் நீதிமன்றத்தின் உத்தரவால் தான் தமிழக காவல்துறை வழக்கில் தீவிர காட்டியது. பெண்களை கேலிச்சித்திரம் செய்து இணையதளங்களில் வெளியிடுவதால், பல பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பெண் முதல்வராக இருக்கும் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை” என்று விஜயகாந்த்  பேசினார்.