பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தி  இருக்கிறார்.

இது குறித்து க அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

“ தமிழக;த்தில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது.  இதனால் நடுத்தர மற்றும் சாம;னிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

இதுமட்டுமில்லாமல் அன்றாடம் பயன்படுத்தும் பால், காய்கறிகள், மளிகைப் பொருள்களின் விலையும் உயர்ந்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் இதனை முக்கிய பிரச்னையாக கருத வேண்டும்.

ஜிஎஸ்டி-யால் அரசுக்கு லாபம் இருக்கலாம். ஆனால் மக்களுக்கு எவ்விதத்திலும் பலன் இல்லை. ஆகவே, பெட்ரோல், டீசல், ‌சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்