சேலம்: சேலம் மாவட்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக இன்று தனி விமானத்தில் சேலம் சென்ற விஜய்க்கு தொண்டர்கள் பிரமாண்டமான வரவேற்பு அளித்தனர். அப்போது கூடிய கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ் ஒன்று வந்து சிக்கியது. இது பரபரப்பை ஏற்படுத்தியது. இருந்தாலும் காவல்துறை கொடுத்த நேரத்திற்குள் குறிப்பிட்ட இடத்தை அடைந்தார்.

கரூர் சம்பவத்திற்கு பிறகு தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்துக்கு தமிழ்நாடு அரசு கடுமையான கெடுபிடிகளை கொடுக்கிறது. 5ஆயிரம் பேர்கள் மட்டுமே கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில், சுமார் ஒன்றரை மாதம் கழித்து தேர்தல் பரப்புரைக்காக இன்று சேலம் வந்துள்ள விஜய்க்கு சேலம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனால் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. அப்போது, விஜய்யின் கார் சுங்க சாவடி அருகே வந்தபோது பைக்குகளில் விஜய் காரை தொடரும் தொண்டர்களுடன் மேலும் பெரியார் பல்கலைக்கழக மாணவர்கள் விஜய காரை சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
காவல்துறையினரால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு ரசிகர்கள் திரண்டதால், அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஒன்று கூட்டத்தில் சிக்கிக் கொண்டது. உடனடியாக விரைந்து செயல்பட்ட போலீசார், கூட்டத்தை விலக்கி ஆம்புலன்ஸ் தடையின்றிச் செல்ல வழிவகை செய்தனர்.
முன்னதாக இன்று காலை சென்னையிலிருந்து தனி விமானத்தில் கிளம்பிய விஜய், சரியாக முற்பகல் 11:30 மணிக்குச் சேலம் விமான நிலையத்தில் இறங்கினார். அங்கிருந்து நிர்வாகிகள் சந்திப்பு நடைபெறும் இடமான சீலநாயக்கன்பட்டிக்கு அவர் காரில் புறப்பட்டார்.
விஜய் செல்லும் வழியில் கமலாபுரம் விமான நிலையம் முதல் புளியம்பட்டி வரை 450-க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். சேலம் விமான நிலையச் சாலையின் இருபுறமும் திரண்டிருந்த தவெக தொண்டர்கள், விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். விஜய் தனது காரிலிருந்து தொண்டர்களை நோக்கிக் கையசைத்தபடி சென்றார்.
விஜய்யின் கார் சுங்க சாவடி அருகே வந்தபோது பைக்குகளில் விஜய் காரை தொடரும் தொண்டர்களுடன் மேலும் பெரியார் பல்கலைக்கழக மாணவர்கள் விஜய காரை சூழ்ந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், அங்கு ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது.அது செல்ல முடியாமல் கூட்டத்தில் சிக்கிக் கொண்டது. உடனடியாக விரைந்து செயல்பட்ட போலீசார், கூட்டத்தை விலக்கி ஆம்புலன்ஸ் தடையின்றிச் செல்ல வழிவகை செய்தனர்.
ஏற்கனவே தவெக நிகழ்ச்சியின்போது, தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகளைக் கொண்டு தொண்டர்களுக்குத் தவெக தலைமை ஏற்கனவே பயிற்சி அளித்திருந்தது. இருப்பினும், எப்படியாவது விஜய்யைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் அலைமோதிய ரசிகர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் அவர்கள் திணறினர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தொண்டர்களை ஓரளவு ஒழுங்குபடுத்தினர். இதனால் அசம்பாவிதம் ஏதும் நிகழ்வது தடுக்கப்பட்டது.
[youtube-feed feed=1]