நடிகர் வடிவேலு நீண்ட நாட்களுக்குப் பிறகு விஷால் நடிக்கும் கத்திச்சண்டை படத்தில் நடிக்கிறார். இப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் புதிய படத்தில் இணையவுள்ளார்.
‘பைரவா’ படத்தைத் தொடர்ந்து அட்லி இயக்கும் படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படத்தில் காமெடி கதாப்பாத்திரத்தில் நடிக்க சம்மதித்துள்ளார் வடிவேலு.
ஏற்கனவே விஜய்யுடன் இணைந்து ‘ப்ரண்ட்ஸ்’, ‘பகவதி’, ‘வசீகரா’, ‘மதுர’, ‘சச்சின்’, ‘போக்கிரி’, ‘வில்லு’, ‘சுறா’, ‘காவலன்’ ஆகிய படங்களில் நடித்திருந்த வடிவேலு ஐந்து ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நடிக்கவுள்ளார்.
இப்படம் விஜய்-வடிவேலு இணையும் 10வது படமகும்.