விஜய் டிவி-யில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் வி.ஜே.ரம்யா.

விஜய்யுடன் ரம்யா நடித்திருந்த ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியானது. இதையடுத்து அவர் நடித்த முதல் படமான ’சங்கத்தலைவன்’ கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.

இந்நிலையில் குழந்தை பருவத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார் ரம்யா. இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது தமிழகத்தின் அட்வகேட் ஜெனரலாக இருந்த தனது தந்தை அன்றைய முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க சென்றபோது தங்களையும் அழைத்துச் சென்றதாக குறிப்பிட்டிருந்த ரம்யா, ஜெயலலிதா தன்னை தூக்கி மடியில் உட்கார வைத்து காப்பி கொடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

[youtube-feed feed=1]