பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சார்பட்டா பரம்பரை’. கே 9 ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது.

ஆர்யா ஜோடியாக துஷாரா நடிக்கிறார். நடிகர் கலையரசன், ஜான் கொக்கென், ஷபீர், காளி வெங்கட் ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். முரளி ஒளிப்பதிவு செய்கிறார். செல்வா படத்தொகுப்பு செய்கிறார். ராமலிங்கம் கலை பணிகள் மேற்கொள்கிறார். அன்பறிவு சண்டை காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்பதே தெரியாத நிலையில் ‘சார்பட்டா பரம்பரை’ படக்குழுவினர் நேரடியாக ஓடிடியில் ஜூலை 22 ஆம் தேதி வெளியிடவுள்ளனர். இந்தப் படத்தின் உரிமையை அமேசான் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் சார்பட்டா பரம்பரை படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லரை நடிகர் சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சார்பட்டா பரம்பரையின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை கடும் போட்டிக்கிடையில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது. படம் ஓடிடியில் வெளியான சில வாரங்களில் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்படும் என்கின்றன செய்திகள்.