சென்னை:

பிகில் பட விழாவில், விஜய் பேசியது ஒன்னும் தப்பா இல்ல, ஒரு நல்ல மேடையை நியாயமான விஷயத்திற்கு பயன்படுத்தி உள்ளார், தம்பிக்கு வாழ்த்துக்கள் என்று நடிகர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து உள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

தமிழகத்தில் பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ மரணமடைந்த விவகாரம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அரசியல் கட்சிகள் பேனர்கள் வைப்பதில் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன.

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற பிகில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் விஜய், சுபஸ்ரீ குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துக்கொண்டு, சுபஸ்ரீ விஷயத்தில் யாரைக் கைது செய்ய வேண்டுமோ அவர்களை கைது செய்யாமல், பிரின்டிங் பிரஸ் வைத்து இருப்பவரையுன், லாரி டிரைவரையும் கைது செய்துள்ளார்கள், யாரை எங்க உட்கார வைக்கணுமோ அவரை அங்க உட்கார வையுங்க என்று கூறினார்.

விஜயின் இந்த பேச்சு கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

இநத நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கமல்ஹாசன்,  விஜய் நியாயத்துக்காக குரல் கொடுத்திருக்கிறார். நல்ல ஒரு மேடையை நியாயமாக குரல் கொடுப்பதற்காக பயன்படுத்தி இருக்கிறார் தம்பி விஜய், அவர் பேசியதில் தப்பா ஒன்றும் இல்லை . அவருக்கு எனது பாராட்டுக்கள் என தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]