நடிகர் சாய் தரம் தேஜின் சகோதரர் வைஷ்ணவ் தேஜ் நாயகனாக அறிமுகமாகியுள்ள தெலுங்குப் படம் ‘உப்பெனா’.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் பிப்ரவரி 12-ம் தேதி வெளியானது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

முதல் வாரத்திலேயே உலகளவில் சுமார் 70 கோடி ரூபாய் வசூல் செய்து ஆச்சரியம் அளித்தது. புதுமுக நடிகரின் படம் இந்தளவுக்கு வசூல் செய்திருப்பது இதுவே முதல் முறை என்று தெலுங்கு திரையுலகின் வர்த்தக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தமிழில் ‘உப்பெனா’ ரீமேக்கின் மூலம் விஜய்யின் மகன் சஞ்சய் நாயகனாக அறிமுகமாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலேயே இதே ‘உப்பெனா’ தமிழ் ரீமேக்கில் விஜய் மகன் சஞ்சய் என்ற வதந்தி வெளியானது. அப்போது மறுப்பு தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

[youtube-feed feed=1]