விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவுள்ள அடுத்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது உறுதியாகியுள்ளது.
மே மாதம் படப்பிடிப்பு ஆரம்பிக்கவுள்ளது .
மாஸ்டர்’ படத்தின் உலகளாவிய உரிமையையும், விக்ரம் நடித்து வரும் ‘கோப்ரா’ படத்தையும் தயாரித்து வரும் லலித் இந்தப் படத்தைத் தயாரிக்க முன்வந்துள்ளார்.
2015-ம் ஆண்டு விஜய் சேதுபதி – விக்னேஷ் சிவன் கூட்டணி இணைந்து ’நானும் ரவுடிதான்’ என்ற மாபெரும் ஹிட் படத்தைக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது .