விஜய் சேதுபதி மலையாளத்தில் ஏற்கனவே ‘மார்கோனி மதை’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

அவர் இப்போது அறிமுக பெண் இயக்குநர் இந்து டைரக்டு செய்யும் ’19 (1) ( A)’ மலையாளப் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்க, முக்கிய வேடத்தில் இந்திரஜித் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, தமிழ் எழுத்தாளராக நடித்துள்ளார்.

தமிழகத்தில் பிறந்து கேரளாவில் வசிக்கும் கேரக்டரில் நடிக்கும் விஜய் சேதுபதி, எழுத்தாளர் என்பதால் கலப்படமற்ற, சுத்தமான மலையாளத்தில் பேச வேண்டும். அதற்காக அவர் ரொம்பவே மெனக்கெட்டுள்ளார்.

படப்பிடிப்பு தொடங்கும் முன்பு சீக்கிரத்திலேயே, படப்பிடிப்பு தளத்துக்கு வந்து விடும் விஜய் சேதுபதி, மலையாள உச்சரிப்பை இயக்குநரிடம் தெளிவாக கேட்டுக்கொண்டு, நடித்து கொடுத்துள்ளார்.

“விஜய் சேதுபதி ஷுட்டிங்கின் முதல் நாளிலேயே கேரக்டருடன் ஒன்றி விட்டார், படத்தில் அவரது பங்கு அளப்பரியது” என புகழ்கிறார், இயக்குநர் இந்து.

– பா. பாரதி

[youtube-feed feed=1]