வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ், மகிழ் திருமேனி, விவேக், இயக்குநர் மோகன்ராஜா, கனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’.
கொரோனா ஊரடங்கால் ஷூட்டிங் தடைப்பட்டிருந்தது . தமிழக அரசு இறுதிக்கட்டப் பணிகளுக்கு அனுமதியளித்ததைத் தொடர்ந்து, மும்முரமாக பணிகளைத் தொடங்கிவிட்டனர்.
தமிழக அரசு படப்பிடிப்புக்கு அனுமதி அளித்ததும், இறுதிக்கட்டப் படப்பிடிப்பையும் தொடங்க ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படக்குழு முடிவு செய்துள்ளது.
சந்திரா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் இசக்கி துரை இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறார்.
இசையமைப்பாளராக நிவாஸ் கே பிரசன்னா, ஒளிப்பதிவாளராக மகேஷ் முத்துசுவாமி, கலை இயக்குநராக ஜான் பிரிட்டோ, எடிட்டராக சதீஷ் சூர்யா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

[youtube-feed feed=1]