
தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் சீனு ராமசாமி இணையும் அடுத்த திரைப்படத்திற்கு தலைப்பு உறுதியாகிவிட்டதாக சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இது பற்றி தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள சீனு ராமசாமி “மாமனிதன் தலைப்பு ஏற்கனவே தயாரிப்பாளர் திரு.ஜெயசீலன் என்பவரிடம் இருந்தது. அதை முறைப்படி திரு.யுவன் ஷங்கர் ராஜா இரண்டு நாட்களுக்கு முன்பு பெற்றார். ஆகவே மாமனிதன் படத்தின் தலைப்பு எங்கள் படத்திற்கு உறுதியானது!” என தெரிவித்துள்ளார்.
மேலும் அத்துடன் இந்த தலைப்பை பெற்றதால் படத்தின் முதல் பார்வை, பாடல்கள் உள்ளிட்ட தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
[youtube-feed feed=1]'மாமனிதன்'தலைப்பு ஏற்கனவே தயாரிப்பாளர் திரு,ஜெயசீலன் என்பவரிடம் இருந்தது அதை முறைப்படி திரு,யுவன்சங்கர்ராஜா இரண்டு நாட்களுக்கு முன்பு பெற்றார் ஆகவே மாமனிதன் படத்தின் தலைப்பு எங்கள் படத்திற்கு உறுதியானது.
தலைப்பு பெற்றதால் முதல் பார்வை,பாடல்
விரைவில் ❤️ @VijaySethuOffl @thisisysr pic.twitter.com/A0XDgtY0kN— Seenu Ramasamy (@seenuramasamy) March 1, 2021