கர்ணன் திரைப்படம் ரசிகர்கள், எழுத்தாளர்கள், விமர்சகர்கள், திரையுலக பிரமுகர்கள் என அனைத்துத் தரப்பினரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. தற்போது இந்தப் படத்தைப் பற்றி நடிகர் விஜய் சேதுபதி தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தைப் பார்த்த விஜய் சேதுபதி, “எக்ஸலென்ட் மூவி… டோண்ட் மிஸ் இட்!” என்று பதிவிட்டுள்ளார். இவரைப் போல் பலரும் கர்ணனை பாராட்டி வருகின்றனர்.

இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனி, “கர்ணன்… இன்னும் பிரமிப்பு அகலவில்லை…. அதிர்வுகள் ஓயவில்லை… வென்றான்… தம்பி மாரி செல்வராஜ் அடுத்த தளத்திற்கு உயர்ந்துவிட்டார்… உழைத்த ஒவ்வொருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்” என கூறியுள்ளார்.