கோலிவுட்டில் பன்முகத் திறமையான நடிகராக திகழ்கிறார் நடிகர் விஜய் சேதுபதி.

சில மாதங்களுக்கு முன்பு அவர் ’மாநகரம்’ படத்தின் இந்தி ரீமேக்கில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் படத்தில் இடம்பெறும் அவரது தோற்றத்தை, தற்போது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் விஜய் சேதுபதி.

கையில் துப்பாக்கியுடன் ஒரு சிறுவனை கடத்திச் சென்ற படத்தைப் பகிர்ந்த விஜய் சேதுபதி, ‘#மும்பைக்கர்’ எனத் தலைப்பிட்டு சந்தோஷ் சிவனை குறிப்பிட்டிருந்தார். இந்தப் படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்குகிறார். இதில் விக்ராந்த் மாஸ்ஸி, தான்யா மணிக்தலா, சஞ்சய் மிஸ்ரா, சச்சின் கெடேகர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

[youtube-feed feed=1]