கமர்சியல் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தாலும், வில்லன் ரோல், வித்தியாசமான கதை, வித்தியாசமான கதாபாத்திரம் என தேர்ந்தெடுத்து நடிப்பதிலும் குறை வைக்காமல் அசத்தி வருகிறார் விஜய் சேதுபதி.

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படமான 800 படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு பல எதிர்ப்புகள் கிளம்பியதால் முரளிதரனின் விடுத்த அறிவிப்பை ஏற்று விலகினார்.

இந்நிலையில் தற்போது, இயக்குநர் வி.எஸ்.இந்துவின் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இதில் நித்யா மேனன், இந்திரஜித் சுகுமாரன், இந்திரன்ஸ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இதன் படப்பிடிப்பு இம்மாதம் தொடுபுழாவில் தொடங்கவுள்ளது.

19(1)(a) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஆண்டோ ஜோசப் பிலிம் கம்பெனி தயாரிக்கவுள்ளது. இதற்கு இசையமைப்பாளராக கோவிந்த் வசந்தா பணியபுரியவுள்ளார்.

இதன் அதிகார பூர்வ அறிவிப்பாக இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார் விஜய்சேதுபதி.