
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘அது இது எது’, ‘கலக்கப் போவது யாரு’ உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் வடிவேல் பாலாஜி.
நேற்று (செப்டம்பர் 10) மாரடைப்புக்கு சிகிச்சையில் இருந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் காலமானார்.
அவருடைய மறைவு சின்னத்திரை நடிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல்வேறு நடிகர்கள் அவருடைய உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். இன்று (செப்டம்பர் 11) காலை வடிவேல் பாலாஜியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் விஜய் சேதுபதி.
பின்பு, வடிவேல் பாலாஜி குடும்பத்தினரிடம் நிதியுதவியை வழங்கினார் விஜய் சேதுபதி. எவ்வளவு நிதியுதவி என்பதை விஜய் சேதுபதியோ அல்லது அவரது தரப்போ வெளியிட மறுத்துவிட்டனர்.
Patrikai.com official YouTube Channel