இன்று விஜய்சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

இவர் பட்டாக்கத்தியுடன் பிறந்தநாள் கேக் வெட்டிய புகைப்படங்கள் வெளியாகி சமூகவலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தற்போது தனது வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த விஜய்சேதுபதி அடுத்ததாக பொன்ராம் படத்தில் நடிக்கவுள்ளதாகவும் அந்த படத்தில் கத்தி முக்கிய பங்கு வகிக்கும் என்பதால் கத்தியை வைத்து கேக் வெட்டியதாகவும் அது யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவிப்பதாகவும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

[youtube-feed feed=1]