
விஜய் சேதுபதி கைவசம் அனபெல் சேதுபதி, கடைசி விவசாயி, மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளிர், விடுதலை, காந்தி டாக்ஸ், விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் உள்ளன.
இதுதவிர தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், காக்கா முட்டை படத்துக்காக தேசிய விருது வென்ற இயக்குனர் மணிகண்டனுடன் நடிகர் விஜய் சேதுபதி மீண்டும் கூட்டணி அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
‘ஆண்டவன் கட்டளை’ மற்றும் ‘கடைசி விவசாயி’ ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றிய விஜய் சேதுபதி, தற்போது 3-வது முறையாக அவருடன் கூட்டணி அமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]