தமிழ் சினிமாவின் முன்னனி நடிகரான விஜய், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்துவருகிறார்.
இப்படத்தைத் தொடர்ந்து, பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் படத்தில் விஜய் நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் எடுக்கப்படவுள்ள இப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜூ தயாரிக்கவுள்ளார்.
இந்த படத்துக்கு விஜய்யின் சம்பளம் ரூ.120 கோடி என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன்மூலம் தென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகன் என்ற அந்தஸ்தை விஜய் பெறுகிறார்.
இந்த படத்தின் மூலம் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்கும் இந்திய நடிகர்கள் பட்டியலில் விஜய் இணையவுள்ளார். தமிழ் சினிமாவிலிருந்து நடிகர் ரஜினிகாந்திற்கு பிறகு இப்பட்டியலில் இரண்டாவதாக நடிகர் விஜய் இணைவது குறிப்பிடத்தக்கது.