சென்னை

னுமதி இன்றி கொடி ஏற்ற தொண்டர்களுக்க்கு நடிகர் விஜய்யின் த வெ க கட்சி தடை விதித்துள்ளது.

கடந்த 22 ஆம் தேதி சென்னை பனையூர் அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகப்படுத்தியதுடன், கொடிப் பாடலையும் அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டார்.

இந்தக் கொடியில் மேலும் கீழும் ரத்தச் சிவப்பு நிறமும், மையப் பகுதியில் மஞ்சள் நிறமும் இடம் பெற்று கொடியின் நடுவில் வாகைப்பூவும் அதன் இருபுறமும் காலை உயர்த்திய இரு போர் யானைகளும், 28 நட்சத்திரங்களும் இடம்பெற்றிருந்தன.

நடிகர் விஜயின் இந்த அடுத்த கட்ட நகர்வுகள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அவரது ரசிகர்களும் கட்சி தொண்டர்களும் இன்னும் பரபரப்பாக இயங்க துவங்கி உள்ளனர்.

மாநிலத்தின் 234 தொகுதிகளிலும் கட்சி கொடியை தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஏற்றி வருகின்றனர். இதில் பல இடங்களில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் அனுமதியை மீறி கட்சி கொடியை ஏற்றி வருவதாக தகவல் வெளியாகி இருந்தது.

எனவேஅனுமதியின்றி எங்கும் கொடியேற்றக் கூடாது என்று தொண்டர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் அறிவுறுத்தி உ விதிகளை மீறி கொடிக்கம்பங்கள் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.