விஜய் மல்லையாவுக்கு ரூ.579 கோடி அபராதம்…..லண்டன் நீதிமன்றம்

Must read

லண்டன்:

இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையாவிற்கு லண்டன் நீதிமன்றம் ரூ.579 கோடி அபராதம் விதித்துள்ளது.

இந்திய தொழிலதிபரான விஜய் மல்லையா பல வங்கிகளில் கடன் வாங்கிக் கொண்டு, அதை திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி சென்றார். இவர் மீது லண்டன் நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதில், சிங்கப்பூர் பிஓசி ஏவியெஷன் நிறுவனத்திடம் மல்லையா நடத்தி வந்த கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கான குத்தகை அடிப்படையில் வாங்கப்பட்ட விமானங்களுக்கு ரூ.579 கோடி நிலுவை உள்ளது.

இந்த வழக்கின் விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதில மல்லையாவுக்கு ரூ.579 கோடி அபராதம் விதித்து திர்ப்பளித்தார்.

More articles

Latest article