அமெரிக்க அதிபர் மருமகள் மயக்கம் : ஆந்தராக்ஸ் காரணமா ?

Must read

                                                கணவருடன் வெனிசா

ன்ஹாட்டன், அமெரிக்கா

மெரிக்க அதிபர் ட்ரம்ப் மருமகள் ஒரு தபாலை பிரித்ததும் மயங்கி விழுந்தது அமெரிக்காவில் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மூத்த மகன் டொனல்ட் ஜுனியர்.    இவர் தனது மனைவி வெனிசாவுடன் அமெரிக்காவில் உள்ள மன்ஹாட்டன் நகரில் வசித்து வருகிறார்.   இவர் வீட்டுக்கு பாஸ்டன் நகரில் இருந்து அனுப்பப் பட்டதாக முத்திரையுடன் கூடிய தபால் ஒன்று வந்துள்ளது.   அதைப் பிரித்த உடன் மூச்சு திணறல் எற்பட்டு வெனிசா மயங்கி விழுந்துள்ளார்.

அடுத்தடுத்து அவரது தாயார்,  வீட்டு வேலையாளர் என வீட்டிலுள்ளோர் பாதிக்கப் பட்டுள்ளனர்.    அவர்கள் நீயூயார் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.    அந்த தபால் உறையில் வந்தது ஆந்த்ராக்ஸ் கிருமியை பரப்பும் பௌடராக இருக்கலாம் என்னும் ஐயம் உண்டாகி இருக்கிறது.    தபால் உறை பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த தகவல் அமெரிக்காவில் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.

More articles

Latest article