நிதிமுறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் வங்கிக் கடன் நிலுவை உட்பட பல்வேறு புகார்களை அமலாக்கப் பிரிவு மல்லையாவை விசாரணை செய்து வருகிறது. முன்று முறை விசாரணைக்கு அழைத்தும் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்பதைச் சுட்டிக் காட்டி மல்லையாவை அமலாக்க இயக்குனரகம் மத்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு மல்லையாவின் பாஸ்போர்ட்டை(டிப்ளமேட்டிக்) முடக்க வேண்டும் என்று கோரி கடிதம் எழுதியிருந்தது.
அமலாக்கத் துறையினரின் கோரிக்கைக்கு ஏற்று மல்லையாவின் பாஸ்போர்ட்டை மத்திய வெளியுறவு அமைச்சகம் முடக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பல வங்கியில் ரூ.9000 கோடி கடன் பெற்று மோசடி செய்த வழக்கு தொடர்பாக அமலாக்க இயக்குனரகம் மல்லையாவை விசாரிக்க வாய்ப்புகள் வழங்கியது, கடனை திருப்பிச் செலுத்தும் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால் ஆஜராக இயலாது என்று காரணம் தெரிவித்துள்ளார்.
பாஸ்போர்ட் முடக்கப்படும் பட்சத்தில் அவர் மீது ஜாமீனற்ற பிடிவாரண்ட் மற்றும் ரெட் கார்னர் (இண்டர்போல் மூலம்) நோட்டீஸ் மூலம் உலகின் எந்த மூலையிலிருந்தாலும் இந்தியாவுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.