3201455E00000578-3482854-image-m-2_1457475682254
மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக  தொழிலதிபர் விஜய் மல்லையா அனுப்பிய ராஜினாமாவை, மாநிலங்களவைத் தலைவர் ஹமித் அன்சாரி ஏற்றுக்கொண்டார்.
வங்கிகளில் ஒன்பதாயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு பணத்தை திருப்பிச் செலுத்தாமல், இங்கிலாந்திற்கு தப்பியோடிவிட்டார் விஜய்மல்லையா. அவரை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக விஜய் மல்லையாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பறிப்பதற்கான நடவடிக்கையை நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு, மேற்கொண்டது. இதற்கிடையே  தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை விஜய் மல்லையா ராஜினாமா செய்வதாக  மாநிலங்களவை தலைவர் ஹமீது அன்சாரிக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
இந்த நிலையில், விஜய் மல்லையாவின் ராஜினாமா ஏற்கப்படுவதாக மாநிலங்களவைத் தலைவர் ஹமீது அன்சாரி அறிவித்தார்.   இத்தகவலை மாநிலங்களவை துணைத்தலைவர் பி.ஜே.குரியன் உறுதிப்படுத்னார்.