லண்டன்

தம்மை ஓடிப்போனதாக குற்றம் சாட்டும் பாஜக மற்றும் மோடி அரசின் மீது  விஜய் மல்லையா கடுமையாக தாக்கி உள்ளார்..

பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையா வங்கிகளில் கடன் வாங்கி விட்டு திருப்பிச் செலுத்தவில்லை. அதனால் சிபிஐ நடவடிக்க எடுக்க இருந்த போது நாட்டை விட்டு லண்டனுக்கு ஓடிவிட்டார். அவரை இந்தியாவுக்கு அழைத்து வர இந்தியா லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தது. அவரை நாடு கடத்தி இந்தியாவுக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது. விஜய் மல்லையா அந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார்.

விஜய் மல்லையாவின் விமான நிறுவன பங்குகள் ரூ,1008 கோடிக்கு விற்கப்பட்டு வங்கிகளுக்கு அளிக்கப்பட்டது. அது முதல் அவர் இந்திய அரசின் மீது கடும் கோபத்தில் உள்ளார். வங்கிகள் தன்னை திருடனைப் போல் நடத்தியதாகவும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு உதவுவதாகவும் குற்றம் சாட்டி இருந்தார். அது மட்டுமின்றி பாஜக அரசு தன்னிடம் ஓர வஞ்சனையுடன் நடத்துவதாக்வும் தெரிவித்துள்ளார்.

விஜய் மல்லையா, “பிரதமர் மோடி தனது அறிக்கையில் எனது பெயரை குறிப்பிட்டு நான் வங்கிக்கு தரவேண்டிய ரூ.9000 கோடிக்கு பதில் ரூ.14000 மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்து விட்டதாக தெரிவித்துள்ளார். ஆனால் பாஜகவினர் என்ன ஓடிப்போனவன் என குற்றம் சாட்டுகின்றனர்.

நான் தரவேண்டிய பணத்துக்கும் அதிகமாகவே சொத்துக்களை பறிமுதல் செய்ததாக பாஜகவின் தலைவர் கூறும் போது கட்சியினர் என்னை ஏமாற்றி விட்டு ஓடியவனாக சித்தரிக்கின்றனர்.   எனக்கு 1992 ஆம் வருடத்தில் இருந்து இங்கிலாந்து குடியுரிமை உள்ளது.    இதைக் கூட தெரியாமல் நான் ஓடிப் போனதாக அவர்கள் கூறுகின்றனர்.” என தெரிவித்துள்ளார்.