
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வளம் வரும் விஜய்க்கு அரசியலுக்கு வரும் ஆசை இருக்கிறது. அதற்காக அவர் சரியான நேரத்திற்காக காத்திருக்கிறார்.
2021ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வரும் இந்த நிலையில் விஜய் ரசிகர்கள் அடித்த போஸ்டர் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் புகைப்படங்களில் விஜய் முகத்தை ஒட்ட வைத்து போஸ்டர் அடித்துள்ளனர்.
மக்கள் திலகத்தின் மறு உருவமே விரைவில் வருக நல்லாசி தருக. ஆளப்போறான் தமிழன் தளபதி 2021ல்? என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel