கொரோனா பரவல் கேரள மாநிலத்தில் உச்சத்தில் உள்ளதால், அங்கு திரையரங்குகள் இன்னும் திறக்கப்படவில்லை.
எட்டு மாதங்களாக மூடிக்கிடந்த தியேட்டர்கள் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் திறக்கப்பட்டு விட்டன.
விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் வரும் 13 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கேரளாவில் திரையரங்குகள் மூடிக்கிடப்பதால் அங்குள்ள விஜய் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
“புதிய ரக கொரோனா பரவலால், அதனை எதிர்கொள்ள கேரள அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது” என செய்தியாளர்களிடம் தெரிவித்த சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா, “எனவே தியேட்டர்களை இப்போது திறக்க வாய்ப்பு இல்லை” என கூறினார்.
இந்த அறிவிப்பு அங்குள்ள விஜய் ரசிகர்களை அதிர்சியில் ஆழ்த்தியுள்ளது.
#Thalapathy Vijay Makkal Iyakkam has written to CM @vijayanpinarayi, stating the hardships of Cinema employees.
A great initiative by #Vijay fans (Kollam District, Kerala)#mohanlal #Mammootty @aashameera @sri50 @taran_adarsh #Master @kaimalnandu @TheAakashavaani @Forumkeralam1 pic.twitter.com/0EW9WXS19r
— Augustine G Akkara (@age_x_) December 30, 2020
“கேரளாவில் தியேட்டர்களை திறந்து மாஸ்டர் படத்தை பார்க்க வழி செய்தால், விஜய் ரசிகர்கள், இடதுசாரிகளுக்கு ஓட்டளிப்போம்” என அமைச்சர் சைலஜாவுக்கு அங்குள்ள ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
“கொரோனா காரணமாக தமிழ்நாட்டுக்கு சென்று ‘மாஸ்டர்’ படத்தை பார்க்க முடியாது என்பதால், கேரளாவில் திரையரங்குகளை திறக்க வேண்டும்” என்று விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர்.
– பா. பாரதி