
நடிகர் விஜயின் ரசிகர் மன்றம், மக்கள் இயக்கம் என்ற பெயரில் கடந்த 2009 ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றது.
இந்த மக்கள் இயக்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளராக புதுச்சேரியை சேர்ந்த புஸ்சி ஆனந்த் என்பவர் தற்போது செயல்பட்டு வருகின்றார்.
இந்நிலையில் தான் மக்கள் இயக்கம் ஆரம்பத்தில் இருந்து நடிகர் விஜய்காக மன்றதின் பணியாற்றி வரும் நிர்வாகிகளை தமிழகம் முழுவதும் மாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் திருச்சி மாவட்ட விஜய் மக்கள் மன்றத்தின் பழைய நிர்வாகிகள் விஜய் ரசிகர்கள் என்று தனித்து இயங்க தொடங்கியுள்ளனர். ஆனால் அப்படி தனித்து செயல்படுபவர்கள் மீது புஸ்சி ஆனந்த் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து மிரட்டுவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர் விஜய் ரசிகர்கள்.
இதனால் புஸ்சி ஆனந்த பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கருப்புக்கொடி காட்டப்படும் என்றும் விஜய் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.
[youtube-feed feed=1]