விஜய் தேவரகொண்டா பெயரில் போலியாக நடிகர்கள் தேர்வு செய்யும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு, அவரது தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சில தயாரிப்பு நிறுவனங்கள் விஜய் தேவரகொண்டாவை வைத்து படம் தயாரிக்கவுள்ளோம் என்று நடிகர்கள் தேர்வு நடத்தியுள்ளனர்.
இது தொடர்பாக விஜய் தேவரகொண்டா தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் :-
“விஜய் தேவரகொண்டா குழுவினரான நாங்கள் சில தயாரிப்பு நிறுவனங்கள் விஜய் தேவரகொண்டாவை வைத்துப் படமெடுப்பதாகவும், நடிகர் நடிகையர்களுக்கான ஆடிசன் நடைபெறுவதாகவும் பொய்யான தகவல்களை வெளியிடுவதைக் கவனித்தோம்.
விஜய தேவரகொண்டா தொடர்பான எந்தவொரு படத்தை பற்றிய அறிவிப்பை அவரோ அல்லது தயாரிப்பாளர்களோ வெளியிடுவார்கள். விஜய் தேவரகொண்டாவின் அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கங்களிலும் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்புகள் உறுதி செய்யப்படும்.
While we take action against these perpetrators, We request all to be alert and double check any information in their personal best interests.
Thanks,
Team Deverakonda— Team Deverakonda (@TeamDeverakonda) September 13, 2020
இது போன்ற மோசடிக்காரர்களின் மேல் நாங்கள் நடவடிக்கை எடுக்கும் அதே வேளையில் அனைவரும் கவனமாகவும், வரும் தகவல்களை ஒன்றுக்கு இரண்டு முறை உறுதி செய்துகொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறோம்”
இவ்வாறு விஜய் தேவரகொண்டா தரப்பு தெரிவித்துள்ளது.