தெலுங்கு சினிமா துறையினர் மத்தியில் மிகவும் பிரபலமாகி வருகிறது ரியல் மேன் சேலஞ்சு.
வீட்டில் இருக்கும் பெண்களுக்கு உதவும் விதமாக இந்த சேலஞ்சு துவங்கப்பட்டது.
சந்தீப் ரெட்டி வங்கா ஆரம்பித்த இது தற்போது பல பிரபலங்களையும் வீட்டு வேலை செய்யவைத்துள்ளது.
இயக்குனர் கொரட்டல சிவா விஜய் தேவரகொண்டாவை நாமினேட் செய்திருந்த நிலையில். “என் அம்மா எந்த வேலையையும் செய்ய விடுவத்தில்லை” என அவர் நேற்று கூறியிருந்தார்.
Bits of my day in lockdown 🙂
Documented by @ananddeverkonda#BeARealMan challenged by @sivakoratala sir. I would like to extend it to Kunjikkaa @dulQuer pic.twitter.com/8bLAAQYeMo— Vijay Deverakonda (@TheDeverakonda) April 25, 2020
இந்நிலையில் இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் . காலையில் மிக தாமதமாக தான் தூங்கி எழுகிறார் அவர். தூங்கி எழுந்தபிறகு 1 லிட்டர் தண்ணீர் குடிக்கிறார். மதுபானங்கள் வந்த பாட்டில்களை தூக்கி போடாமல் அதை தண்ணீர் பாட்டில்களாக பயன்படுத்துகிறார். பின் டிவியை துடைத்து அதன்பிறகு கேம் விளையாட ஆரம்பிக்கிறார் .
அதன் பிறகு வீட்டில் அனைவருக்கும் மாம்பழ ஐஸ்கிரீம் செய்கிறார். அதனை குடும்பத்தினர் அனைவருக்கும் கொடுக்கிறார். அதோடு முடிவுக்கு வருகிறது இந்த வீடியோ.