அர்ஜுன் ரெட்டி’ தெலுங்குப் படத்தின் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. தற்போது விஜய் தேவரகொண்டா நடிப்பில் ‘டியர் காம்ரேட்’ படம் ரிலீஸுக்குத் தயாராகியுள்ளது.
பரத் கம்மா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ராஷ்மிகா மண்டன்னா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படம், வருகிற ஜூலை 26-ம் தேதி ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விஜய் தேவரகொண்டா தயாரிப்பாளராக அறிமுகமாகிறார் .இயக்குனர் தருண் பாஸ்கர், இயக்கும் இப்படத்தில் சமீர் என்ற புதுமுகம் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவர் ஜோடியாக வாணி போஜன் நடிக்கிறார்.