வரும் ஜூன் 22-ம் தேதி நடிகர் விஜய் தனது 47-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

அவரது பிறந்தநாளைக் கொண்டாட விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்கள். நலத்திட்ட உதவி, உணவு, ரத்த தானம் என விஜய் ரசிகர்கள் தெறிக்க விடுவார்கள். மறுபுறம் இணையத்தில் இருக்கும் விஜய் ரசிகர்கள் அவரது பிறந்தநாள் ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து கொண்டாடுவார்கள்.

இந்நிலையில் CDP எனப்படும் காமன் டிபி-யை டிசைன் செய்து இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். இந்த காமன் டிபி-யை தங்களது சமூக வலைதள கணக்குகளின் முகப்புப் படமாக வைத்து சிறப்பிப்பார்கள்.

டிபி-யில் ’மெர்சல்’ வெற்றிமாறனும், ‘பிகில்’ ராயப்பனும் கைகளில் தங்கள் பலத்தை நிரூபிக்கும் விதமாக உள்ளது. சின்ன வயது விஜய் முதல் தளபதி 65 பட விஜய் வரை அவரின் முக்கியமான தோற்றங்கள் இடம் பெற்றுள்ளன.