‘தமிழரசன்’, ‘அக்னிச் சிறகுகள்’, ‘காக்கி’ உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் ஆண்டனி.
கொரோனா அச்சுறுத்தலால் அவதிக்கு உள்ளாகியுள்ள தயாரிப்பாளர்களை கணக்கில் கொண்டு, நடிகர்களில் முதல் நபராக தனது சம்பளத்தில் 25% குறைத்துக் கொள்வதாக அறிவித்தார்.
இந்த நிலையில்’அக்னிச் சிறகுகள்’ படத்தின் இயக்குநர் நவீன் தனது ட்விட்டர் பதிவில் விஜய் ஆண்டனி குறித்து புகைப்படங்களுடன் பதிவொன்றை போஸ்ட் செய்துள்ளார் .


அதில் “சுவிட்சர்லாந்தில் மாட்டுத் தொழுவத்தில் அமர்ந்து மேக்கப் போட்டுக்கொள்ளும் மகத்தான மனிதர் தன் சம்பளத்தில் 25% குறைத்துக் கொள்வதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. சென்னையில் காரில் ஏசி போட்டுக் கொள்ளாதவர் ரஷ்யாவின் -20 டிகிரி குளிரை எங்களுக்காகத் தாங்கி நடித்ததுதான் பெரிய விஷயம்” என தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]