நடிகர் ராகவா லாரன்ஸ் மாற்றுத்திறனாளி மாணவன் டான்சன், வாத்தி காம்மிங் பாடலுக்கு இசையமைத்த வீடியோவை தனது ட்விட்டரில் பகிர்ந்து விஜய் மற்றும் அனிரூத் அவர்களிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தார்.


அதில், ” டான்சன் இதற்காக 3 நாட்களாக பயிற்சி எடுத்துள்ளார். அவருடைய கணவு உங்கள் இருவர் முன்னிலையில் வாசிக்க வேண்டும் என்பதுதான். இந்த வீடியோவை பாருங்கள், அவருடைய கனவு நிறைவேறும் என்று நினைக்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.


லாரன்ஸ் தனிப்பட்ட முறையில் விஜய் மற்றும் அனிருத்துக்கு கால் செய்து பேசி, சம்மதம் வாங்கியுள்ளார். விஜய் லாக்டவுன் முடிந்த பின்னர் அந்த இளைஞரை அழைத்து வரக் கூறியதாகவும், அனிருத் தன் இசையில் வாசிக்க வாய்ப்பு வழங்குவதாக கூறியதாகவும் லாரன்ஸ் கூறியுள்ளார்.