தெலுங்குத் நடிகர் மகேஷ் பாபு கடந்த ஆக., 9ம் தேதி பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு இந்தியத் திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் மகேஷ் பாபு, “எனது பிறந்தநாளைக் கொண்டாட இதைவிட சிறந்த வழி இருக்க முடியாது. இந்த #GreenIndiaChallenge சவாலை ஜூனியர் என்.டி.ஆர், விஜய், ஸ்ருதிஹாசன் ஆகியோருக்குவிடுக்கிறேன். இந்தச் சங்கிலி எல்லைகளைக் கடந்து தொடரட்டும். இதற்கு நீங்கள் எல்லாரும் ஆதரவு அளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இருதினங்களுக்கு பின் மகேஷ்பாபுவின் சவாலை விஜய் ஏற்று, தனது இல்லத்தில் மரக்கன்று ஒன்றை நட்டுள்ளார். மேலும், ”இது உங்களுக்காக மகேஷ் பாபு. நல்ல ஆரோக்கியம் மற்றும் கிரீன் இந்தியாவுக்காக நன்றி. பாதுகாப்பாக இருங்கள்” என டுவிட்டரில் தெரிவித்துள்ளார் விஜய்.

[youtube-feed feed=1]