லேடி சூப்பர்ஸ்டாராக தென்னிந்திய சினிமாவையே கலக்கி வரும் நயன்தாராவுக்கு மிகப்பெரிய தலைவலியாக இருப்பது அவருடைய பழைய கால காதல் சர்ச்சைகள் தான்.
2003ம் ஆண்டு வெளியான மனசினக்கரே எனும் மலையாள படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். இயக்குநர் ஹரி இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
நடிகர் சிம்புவுடன் லிப் லாக் செய்த புகைப்படங்கள் சர்ச்சையை கிளப்பின. பின்னர், பிரபுதேவாவுடன் ஏற்பட்ட காதலால் அவரின் பெயரை டாட்டூ குத்தியது தலைப்பு செய்தி ஆனது .
இதையெல்லாம் ஒதுக்கி விக்னேஷ் சிவனை கடந்த 5 ஆண்டுகளாக நடிகை நயன்தாரா காதலித்து வருகிறார். அவ்வப்போது அவர்கள் ஒன்றாய் இருக்கும் புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது .
சில ஆண்டுகளுக்கு முன்னதாக பிரபுதேவா பெயர் டாட்டூவை நீக்கிவிட்டு பாசிட்டிவிட்டி என்ற டாட்டூவை தனது கையில் போட்டு இருந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் விக்னேஷ் சிவன் நயன் தாராவுடன் எடுத்த மிரர் செல்ஃபியில் அந்த டாட்டூ வெளிப்பட அதை பற்றி ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர் .முதல் எழுத்தான P அதே ஸ்டைலில் மாறாமல் இருப்பதும், அதனை தொடர்ந்து இருந்த மற்ற எழுத்துக்களை மாற்றியுள்ளார் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர்.
https://www.instagram.com/p/ByiD1N-hBn3/?utm
சமீபத்தில், தனது பழைய காதல்கள் ஏன் பிரிந்தன என்பது குறித்த கேள்விக்கு மனம் திறந்து பதிலளித்த நடிகை நயன்தாரா, நம்பிக்கை இல்லாததே காரணம் என பதிலளித்துள்ளார் என்பது குறிப்ப்பிடத்தக்கது .