கடந்த 1984 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி பிறந்த நடிகை நயன்தாராவுக்கு கடந்த புதன்கிழமை, 36 வது வயது பிறந்த நாளாகும்.
பிறந்த நாளை முன்னிட்டு, நயன்தாரா தமிழில் நடித்த ‘ நெற்றிக்கண்’ படத்தின் டீசர் சென்னையில் வெளியிடப்பட்டது. அவர் மலையாளத்தில் நடித்து வரும் ‘நிழல்;’ படத்தின் போஸ்டர் திருவனந்தபுரத்தில் வெளியிடப்பட்டது.
நயன்தாரா, ‘நிழல்’ பட ஷுட்டிங்குக்கு கேரளா வந்துள்ளதால் அங்கு தனது பிறந்த நாளை ‘கேக்’ வெட்டி கொண்டாடினார். கொண்டாட்டம் நடந்த இடம் மலர்களாலும், வண்ண வண்ண பலூன்களாலும் அலங்கரிப்பட்டு, பிரமிக்க செய்யும் வகையில் காணப்பட்டது.
இந்த விழாவில் நயன்தாராவின் தந்தை குரியன் கொடியாற்று, தாயார் ஓமனா, துபாயில் வசிக்கும் சகோதரர் லீனு ஆகியோர் கலந்து கொண்டனர். நயன்தாராவின் காதலர் சென்னையில் இருந்ததால், அவர் பிறந்த நாளில் பங்கேற்க வில்லை.
எனினும் பிறந்த நாளில் நயன்தாரா ‘கேக்’ வெட்டும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டு இந்த காதல் ஜோடி, நியூயார்க்கில் நயன்தாராவின் பிறந்த நாளை கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.
– பா. பாரதி